புஷ்பாவில் சமந்தா ஆடிய பாடல் நாளை வெளியாகிறது
ADDED : 1481 days ago
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பகத்பாசில், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு கடைசியாக நடந்து முடிந்தது. அல்லு அர்ஜூனுடன் இணைந்து சமந்தா நடனமாடியுள்ள அந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இது இந்த ஆண்டின் சிறந்த பார்ட்டி பாடலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்த பாடலுக்கு சமந்தா கவர்ச்சியாக நடனமாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடலின் லிரிக் வீடியோ நாளை(டிச.,10) வெளியாகிறது. இதுதொடர்பாக சமந்தா பாடல் காட்சியில் தோன்றும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படம் டிச., 17ல் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.