உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான ஜாக்குலின்

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான ஜாக்குலின்

அரசியல் புரோக்கராகவும், மோசடி மன்னனாகவும் கருதப்படுகிறவர் பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். அவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது. கைது செய்து சிறையில் அடைத்த பிறகும், ஜெயலில் இருந்து கொண்டே 200 கோடி மோசடி செய்தார். அவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்டாண்டசுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு சமீபத்தில் வெளியானது அவரும் இந்த மோசடி வழக்கில் சிக்கி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி மும்பையில் இருந்து மஸ்கட் தப்பி செல்ல முயன்ற நடிகை ஜாக்குலினை, மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் மீது அமலாக்கப் பிரிவில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள காரணத்தால் பயணம் மேற்கொள்ள அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. அதன்படி, விசாரணைக்காக டில்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் நேற்று ஆஜரானார். சிறையில் இருந்து கொண்டே இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்ததாக புகார் தொடர்பாகவும், இந்த மோசடியில் நடிகை ஜாக்குலினுக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்தும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இன்னும் சில நாட்களில் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !