சினிமாவில் 19 ஆண்டுகள் : கொண்டாடிய த்ரிஷா
ADDED : 1392 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் த்ரிஷா.
இதுப்பற்றி த்ரிஷா கூறுகையில், ‛‛உனக்கு விடுமுறை தேவைப்படாத ஒரு வேலைக்கு செல் என ஞானி ஒருவர் சொன்னார். இப்போது வரை விடுமுறையில் தான் இருக்கிறேன். உங்களால் தான் இந்த இடத்தில் இருக்கிறேன். என் வாழ்வில் சிறந்த 19 ஆண்டுகளுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.