பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்குமார் 2வது திருமணம்
ADDED : 1438 days ago
அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்திக்குமார். தொடர்ந்து பொய் சொல்ல போறோம், தெய்வ திருமகள், வெப்பம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மேடை காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
கார்த்திகுமார், ரேடியோ ஜாக்கியும், பாடகியுமான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சுசித்ரா பெயரில் வெளியான சில அந்தரங்க படங்கள், அவருக்கு ஏற்பட்ட மனநல பிரச்சினைகள் காரணமாக கடந்த 2017ல் சுசித்ராவை விவாகரத்து செய்தார் கார்த்திக் குமார்.
கார்த்திக் குமார் தற்போது நடிகை அமிர்தா சீனிவாசனை 2வது திருமணம் செய்துள்ளார். மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் அமிர்தா நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணவிழாவில் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.