ஓ மை கோஸ்ட் படப்பிடிப்பை முடித்தார் சன்னி லியோன்
தமிழில் வடகறி படத்தை அடுத்து சன்னி லியோன் நடிக்க இருந்த சரித்திரப் படமான வீரமாதேவி முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நிலையில் பாதியில் நின்றது. அதையடுத்து தற்போது தமிழில் யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்ற பேண்டஷி படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் சன்னி லியோன். அப்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை என அனைத்தையும் ஒரே கட்டமாக படமாக்கி முடித்து விட்டார்கள். இந்த தகவலை ஓ மை கோஸ்ட் படத்தின் இயக்குனர் யுவன் தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு ராணி கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் அறிவித்துள்ள இயக்குனர் யுவன், மற்ற நடிகர் -நடிகைகள் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.