அரசியல்வாதியாக மாறிய மஞ்சு வாரியர்
ADDED : 1389 days ago
மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவிதமாக தற்போது மலையாளத்தில் தயாராகும் 'வெள்ளரிக்கா பட்டணம்' என்கிற படத்தில் கே.பி.சுனந்தா என்கிற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியர். இன்னொரு ஆச்சரியமான விஷயம் இந்த படத்தில் அவர் பிரபல காமெடி நடிகர் சவுபின் சாஹிருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆலப்புழாவில் உள்ள வெண்மணி என்கிற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் கதாபாத்திரத்தில் மஞ்சுவாரியார் நடித்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவது போன்ற போஸ்டர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்திலேயே ஒட்டப்பட்ட அந்த ஊர் மக்கள் அதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். முழுநீள காமெடிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை இயக்குனர் மகேஷ் வெட்டியார் என்பவர் இயக்கியுள்ளார்.