உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்'

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்'

பார்க்கிங், லப்பர்பந்து என அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்த ஹரிஷ் கல்யாணிற்கு இந்த தீபாவளிக்கு வெளியான டீசல் படம் சிறப்பாக அமையவில்லை. இவர் அடுத்து ‛லிப்ட்' பட இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் கதாநாயகியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மலையாளம் நடிகர் செம்பியான் வினோத் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு 'தாஷமக்கான்' என தலைப்பு வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஆக் ஷன் ரோலில் வரும் ஹரிஷ் இன்னொரு பக்கம் ராப் பாடகர் போன்றும் வருகிறார். அவரது ஹேர்ஸ்டைல், கம்பீரமான உடற்கட்டு என வித்தியாசமாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !