பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா
ADDED : 10 minutes ago
மதராஸி படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 25வது படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் அதர்வா தன்னுடைய டப்பிங்கை தொடங்கி இருக்கிறார். அவர் டப்பிங் பேசும் காட்சிகள் மட்டுமின்றி இந்த பராசக்தி படத்தில் அவர் நடித்துள்ள சில காட்சிகளையும் இணைத்து படக் குழு ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளது.