விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது
ADDED : 26 minutes ago
சார் படத்தை அடுத்து விமல் நடித்துள்ள படம் மகாசேனா. தினேஷ் கலைச்செல்வன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் விமலுடன், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் டிசம்பர் 12ம் தேதி திரை வருவதாக படக்குழு போஸ்டர் உடன் அறிவித்துள்ளது. அதோடு இந்த மகாசேனா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக அநீதிக்கு எதிரான கதையில் உருவாகியுள்ள இந்த படம், கும்கி, கும்கி -2 படங்கள் வரிசையில் யானைகளை பின்னணியாக கொண்ட கதையில் உருவாகியுள்ளது.