உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், இந்த படம் கோவாவில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. இந்த விழாவில் கமலஹாசன், சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கோவா சென்று பங்கேற்றார்கள். கோல்டன் பீகாக் விருது பெறுவதற்கு அமரன் படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விழாவுக்கு பிறகு சென்னை திரும்பிய சிவகார்த்திகேயன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சர்வதேச திரைப்பட விழாவில் நான் நடித்த அமரன் படம் திரையிடப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது. நம்ம ஊரில் நடக்கும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் இடம்பெற்று இருப்பது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இந்த படம் திரைக்கு வந்து ஒரு வருஷம் ஆகியுள்ளது. ஆனாலும் இந்த விழாவில் அமரன் திரையிடப்பட்டிருப்பதை அடுத்து படம் திரைக்கு வந்த முதல் நாள் எப்படி இருந்ததோ அதே உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !