உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி

எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி

தெலுங்கில் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள வரும் படம் ஆந்திரா கிங் தாலுகா. ஒரு ஹீரோவுக்கும், ரசிகனுக்கும் இடையேயான சுவாரசியமான விஷயங்களை மையப்படுத்தி சினிமா பின்னணியில் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆந்திராவின் சூப்பர் ஹீரோவாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகர் உபேந்திரா நடித்துள்ளார்.

காந்தாவில் கவனம் ஈர்த்த பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நாடித்துள்ள இந்த படத்தை மகேஷ்பாபு பச்சிகொல்லா இயக்கி உள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹீரோ ராம் பொத்தினேனி, “இந்த தெலுங்கு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு எதற்காக கன்னட திரை உலகைச் சேர்ந்த நடிகர் என்று சிலர் கேட்டார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை உபேந்திரா எப்போதுமே தெலுங்கு சூப்பர் ஹீரோ தான். அவரது பல படங்கள் ஆந்திராவில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ளன. அவருக்கென தனி ரசிகர்கள் இருக்கின்றார்கள். சமீபத்தில் கூட அவரது படம் ஒன்று ஆந்திராவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் ஒரு நடிகராக மட்டுமல்ல இந்த சமூகத்திற்கு தேவையான பொறுப்பான ஒரு கருத்தை சொல்பவராகவும் மிகப்பெரிய மரியாதையை எங்களிடம் பெற்றுள்ளார்” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !