தொடர்ந்து படங்களில் நடிப்பேன் - அம்ருதா சீனிவாசன்
ADDED : 1389 days ago
மேயாத மான், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அம்ருதா சீனிவாசன். சமீபத்தில் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் குமார் ஏற்கனவே பாடகி சுசித்ராவை திருமணம் செய்து 2017ல் அவரை விவாகரத்து செய்தார். அம்ருதா நடித்து இறுதி பக்கம் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. அம்ருதா கூறுகையில், ‛‛எங்கள் திருமணத்தை ஆடம்பரமாக பெரிதாக செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதனால் தான் எளிய முறையில் உறவினர்களை வைத்து மட்டும் திருமணம் செய்து கொண்டோம். கார்த்திக் குமார் இயக்கி வரும் படத்தில் நடித்துள்ளேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன். நிறைய புத்தகம் எழுதும் ஆசை உள்ளது'' என்றார்.