உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சண்டைக் காட்சிக்காக வெயிட் குறைக்கும் ஷாருக்கான்

சண்டைக் காட்சிக்காக வெயிட் குறைக்கும் ஷாருக்கான்

மும்பையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அப்போது பதான் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மகனை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதையடுத்து ஆரியன்கான் சிறையில் இருந்து வெளியே வந்த போதும் உடனடியாக பதான் படப்பிடிப்புக்கு திரும்பவில்லை ஷாருக்கான். காரணம் சண்டைக் காட்சிக்காக வெயிட் குறைத திருத்த ஷாருக்கான் மீண்டும் வெயிட் போட்டு விட்டாராம். அதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தவர் தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், பதான் படத்தில் நடித்துக்கொண்டே அட்லீ இயக்கும் லயன் படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !