உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிப்ரவரியில் பாலா - சூர்யா படம் தொடங்குகிறது

பிப்ரவரியில் பாலா - சூர்யா படம் தொடங்குகிறது

நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து விஷால் ஆர்யாவை வைத்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார் . இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளின் போது வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாலா, சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் படத்துக்காக 60 நாட்கள் கால்சீட் கொடுத்து நடிக்கப்போகிறார் சூர்யா. இதற்கிடையே பிப்ரவரி 4-ஆம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !