உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது

மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது

நடிகர் ஜெயராமின் மகனாக வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர் காளிதாஸ் ஜெயராம். தமிழில் அறிமுகமான இவர் பின்னர் மலையாளத்திலும் சில படங்களில் கதாநாயகனாக மற்றும் முக்கிய வேடங்களில் நடித்தார். அதன்பிறகு புத்தம் புது காலை, பாவ கதைகள் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தன. அதன்பிறகு கமலுடன் இணைந்து நடித்த விக்ரம் மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள் இவர் மீது வெளிச்சம் பாய்ச்சின.

அதேசமயம் கடந்த 2025ல் இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் என்கிற புதிய படத்தில் நடிக்கிறார் காளிதாஸ். இந்த படத்தை அகமத் கபீர் என்பவர் இயக்குகிறார். இவர் மதுரம், கேரள கிரைம் பைல்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !