நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1492 days ago
சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வந்தார் ரஞ்சித். காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா உள்பட பலர் நடித்துள்ளார்கள். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை ரஞ்சித் இயக்கப் போகிறார் .