உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியில் அதிக விலைக்கு 'ராதே ஷ்யாம்' வியாபாரம்

ஹிந்தியில் அதிக விலைக்கு 'ராதே ஷ்யாம்' வியாபாரம்

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'ராதேஷ்யாம்'. இப்படம் தெலுங்கு, ஹிந்தியில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அடுத்த வருடம் ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தை ஹிந்தியில் மட்டும் சுமார் 80 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளார்களாம். இதற்கு முன்பு பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் 70 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டு, 120 கோடி ரூபாய் வரை ஹிந்தியில் வசூலித்துள்ளது. ஹிந்தியில் மட்டும் வெற்றி பெற்ற படம் மற்ற மொழிகளில் தோல்வியடைந்தது.

'சாஹோ' வியாபாரத்தை கணக்கில் கொண்டு தற்போது 'ராதேஷ்யாம்' படத்திற்கு வியாபாரத்தை நிர்ணயித்துள்ளார்களாம். சுமார் 100 கோடி வரை வசூலித்தால் ஹிந்தியில் படம் லாபத்தைக் கொடுத்து விடும் என்கிறார்கள்.

சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள 'ராதேஷ்யாம்' படத்திற்கு ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ள ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படம் சரியான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இப்படத்தின் வசூல் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !