ராணாவின் மும்பை வீட்டில் ஒன்றுகூடிய ஆர்ஆர்ஆர் டீம்
ADDED : 1382 days ago
இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். ரிலீஸாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர். பான் இந்தியா ரிலீஸ் என்பதால் சமீபத்தில் மும்பையில் மிகப்பிரமாண்டமான முறையில் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்காக மும்பை சென்றபோது, அப்படியே மும்பையில் உள்ள ராணாவின் வீட்டிற்கும் விசிட் அடித்துள்ளார்கள். பாகுபலி படம் மூலம் தனக்கு புதிய பாதை போட்டு தந்த இயக்குனர் ராஜமவுலியை தனது வீட்டுக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்துள்ள ராணா, தனது வீட்டு பால்கனியில் நின்றபடி தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.