புதிய சீரியலில் ஹீரோவாகும் ஷ்யாம்
சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என சென்னைக்கு வந்தவர் ஷ்யாம். ஆனால் சிரியலில் மோஸ்ட் வாண்டட் ஹீரோ பட்டியலில் இணைந்துள்ளார். புதுக்கவிதை சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியான அவர் இதுவரை, களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, அரண்மனை கிளி, நிறம் மாறாத பூக்கள் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது கலர்ஸ் தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'வள்ளி திருமணம்' சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார். இதில் யாரடி நீ மோகினி புகழ் நக்ஷத்திரா ஹீரோயினாக நடிக்கிறார். ஷ்யாம் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் லீட் ரோலில் பெரிதாக அமைந்ததில்லை. இந்நிலையில் வள்ளி திருமணம் சீரியலில் அவர் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதால், அவரது ரசிகர்கள் பலரும் ஷ்யாமுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.