ஆக்ஷன் ஹீரோவானார் மாஸ்டர் மகேந்திரன்
ADDED : 1384 days ago
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். வாலிபன் ஆனதும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அது அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. என்றாலும் மாஸ்டர் படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக நடித்ததும் அவர் மீது திரையுலகின் கவனம் திரும்பியது. மாஸ்டர் படத்தின் மூலம் திருப்புமுனை கிடைத்ததால் மீண்டும் மாஸ்டர் மகேந்திரன் ஆனார்.
இப்போது 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அறிண்டம் என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகிறார். இந்த படத்தை ஜானகிராமன் நேசமணி இயக்குகிறார். சிவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் பாஸ்கர் இசை அமைக்கிறார். ராவ் ஒண் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.