உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வலிமை குறித்து புதிய அப்டேட் வெளியானது

வலிமை குறித்து புதிய அப்டேட் வெளியானது

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் அவருடன் ஹூயுமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா ,யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை இ4 என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் வாங்கியிருப்பதாக வலிமை படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜி ஸ்டுடியோ அறிவித்து உள்ளது. அதனால் வலிமை படம் தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !