சசி இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
ADDED : 1464 days ago
டாக்டர் படத்தை அடுத்து டான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் ஒருவரது படத்தில் நடிக்கப் போகிறார் . இதையடுத்து பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அல்லது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களில் ஒன்று தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டான் படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் டான் படம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 17ல் திரைக்கு வர உள்ளது .