தியேட்டரில் வெறும் 2 பேர் - ராக்கி இயக்குனரின் பதில் வைரல்
ADDED : 1379 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் நேற்று வெளியான படம் ராக்கி. கிரைம் த்ரில்லராக வெளியான இந்த படத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாரா வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அந்த தியேட்டரில் இரண்டு நபர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க வந்திருப்பது தெரிகிறது.
இந்த பதிவை பகிர்ந்திருக்கும் ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பெரிய ஸ்கிரீனில் பிரைவேட் ஸ்கிரீன் என்று நினைத்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையிலும் இயக்குனர் எந்த வருத்தமும் காட்டாமல் நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் என பாராட்டி வருகின்றனர்.