மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1379 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1379 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1379 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1379 days ago
தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி நடிகரானவரும் சிம்பு தான். அதே சமயம் பல்வேறு சர்ச்சைகளால் பரபரப்பாக பேசப்பட்டவரும் சிம்பு தான். இடையில் உடல் குண்டாகி பல்வேறு புகார்களுக்கு ஆளானவர், மாநாடு படம் மூலம் பழைய சிம்புவாக வந்துள்ளார். அதிகமாக காதல் சர்ச்சைகளில் சிக்கிய சிம்பு இப்போது ஆன்மிகம் பற்றியே அதிகம் பேசுகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் ஆன்மிக மாற்றம் பற்றிய கேள்விக்கு அளித்துள்ளார். அதில், 'எம்மதமும் சம்மதம்னு எல்லோரும் சும்மா பேச்சுக்குச் சொல்வாங்க. எங்க வீட்டுல தம்பி முஸ்லிமாக, தங்கச்சி கிறிஸ்துவராக, நான் இந்துவாக வாழ்க்கையை நடத்துறோம். எனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசையா இருக்கு. எனக்காக சர்ச், கோயில், தர்ஹான்னு போறாங்க. நானே இந்தக் கொரோனா காலத்தில் கோயில்கள் திறந்த பின் 100 கோயில்களுக்கு மேலே போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்துட்டேன். வெள்ளிக்கிழமை தர்ஹா, ஞாயிறுன்னா சர்ச், மத்த நாள்களிலும் கோயிலுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். இனிமேல் அம்மா அப்பாவைப் பஞ்சாயத்துக்குக் கொண்டு போய் விடாமல் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1379 days ago
1379 days ago
1379 days ago
1379 days ago