நெருக்கமான காட்சிக்கு நோ சொல்லும் மெஹ்ரீன்
ADDED : 1427 days ago
தமிழில், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்ஷடா. தற்போது தமிழில் நடிக்காதபோதும் தெலுங்கில் வெங்கடேஷ் - வருண் தேஜ் இணைந்து நடித்து திரைக்கு வரவிருக்கும் எப்-3 என்ற படத்தில் நடித்துள்ளார். அதோடு ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார்.
தான் நடித்த பல படங்களில் பிகினி உடையணிந்து நடித்துள்ள மெஹ்ரீன், அடுத்தபடியாக தெலுங்கில் தன்னை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வந்த இயக்குனர்கள் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற காட்சிகளில் நடித்து என்னை தைரியமான நடிகை என்று முத்திரை குத்திக்கொள்ள விரும்பவில்லை என்கிறாராம்.