'ராதேஷ்யாம்' பின்னணி இசையமைக்கும் தமன்
ADDED : 1431 days ago
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'ராதேஷ்யாம்'. இப்படத்திற்கு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஹிந்தி மொழி பாடல்களுக்கு மிதூன் இசையமைக்கிறார்.
ஆனால், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான தமன் இசையமைக்க உள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.
சில தினங்களுக்கு முன்பு தமன், “ராதேஷ்யாம்' படத்தின் தியேட்டர் டிரைலருக்கு நான் எந்த இசையும் அமைக்கவில்லை,” என கூறியிருந்தார். அடுத்த சில நாட்களில் அவர்தான் அப்படத்திற்கு பின்னணி இசையமைக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.