உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிக் கட்டத்தில் வீரமே வாகை சூடும்

இறுதிக் கட்டத்தில் வீரமே வாகை சூடும்

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா , மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் து.பா.சரவணன் கூறியதாவது: பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம். அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகி உள்ளது.

ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் வெளியீட்டு பணிகளில், படக்குழு தீவிரம் காட்டி வருகிறோம். வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !