உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆல்பத்துக்காக ஜோடி சேர்ந்த சாந்தனு - மஹிமா

ஆல்பத்துக்காக ஜோடி சேர்ந்த சாந்தனு - மஹிமா

சினிமாவில் ஹிட்டாகும் பாடலுக்கு இணையாக தற்போது தனிப்பாடலாக வெளியாகும் வீடியோ இசை ஆல்பங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகின்றன.. சமீபத்தில் அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ், அடிபொலி பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆச்சர்யமாக வெள்ளித்திரை நட்சத்திரங்களான சாந்தனு - மஹிமா நம்பியார் இருவரும் குண்டுமல்லி என்கிற வீடியோ ஆல்பத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர்.

நடிகராக இருந்து விளம்பரப்பட இயக்குனராக மாறியுள்ள ஆதவ் கண்ணதாசன் தான் இந்த பாடலை இயக்கியுள்ளார். ஜெரார்டு பெய்க்ஸ் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். பொதுவாக பெண் பார்த்துவிட்டு செல்பவர்கள் பெண்ணை பிடித்திருக்கிறது என்றால் பூ வைத்து விட்டு செல்வது வழக்கம்.. அப்படி பூ வைக்கிற விழாவின் பின்னணியில் இந்த பாடலை உருவாக்கியுள்ளோம் என கூறுகிறார் இயக்குனர் ஆதவ் கண்ணதாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !