திரு - அஞ்சலி - கிருஷ்ணா கூட்டணியில் வெப்தொடர்
ADDED : 1420 days ago
டிரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்ட்மென் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ள வெப்தொடர் ‛ஜான்சி'. நடிகை அஞ்சலி முதன்மை வேடத்தில் நடிக்க திரு இயக்கி உள்ளார். முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா R, சம்யுக்தா ஹோமத் ஆகியோருடன் மற்றும் பல முன்ணனி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, முழு நீள அதிரடி வேடத்தில் தோன்றுவது இதுவே முதல் முறை. இந்த இணைய தொடர் ஒரு முழு நீள ஆக்சன் டிரமாவாக உருவாகியுள்ளது. இத்தொடர் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் வைத்திருக்கும், பரபர திரில் பயணமாக இருக்கும். இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.