உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ்

பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் இன்று பிரபல நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். தொழில்முறை மாடலான இவர் 'மிஸ் இந்தியா யுஏஇ'பட்டத்தையும் வென்றுள்ளார். ஆனால், இவர் சின்னத்திரையின் தான் முதன்முதலில் நடித்துள்ளார். சொல்லப்போனால் அந்த நாடகம் வெளியாகிருந்தால் நிவேதா அதில் தான் அறிமுகமாயிருப்பார்.

இதுகுறித்து நிவேதா பெத்துராஜ் ஒரு பேட்டியில், 'மாடலிங்கில் ஒரே மாதிரி டிரெஸ் பண்ணுவது போஸ் கொடுப்பது எனக்கு அலுத்துப் போச்சு. அப்பதான் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் நந்தினி கேரக்டர்ல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுக்காகவே 'பொன்னியின் செல்வன்' படித்தேன். நந்தினி கேரக்டர் ரொம்பவே பவர்புல். அதனால நடிக்க ஆரம்பிச்சேன். ஆனால், சில காரணத்தால் அந்த ப்ராஜெக்ட் நின்றுவிட்டது' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !