உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆயிரம் எபிசோடுகளை கடந்து அம்மன் தொடர் சாதனை

ஆயிரம் எபிசோடுகளை கடந்து அம்மன் தொடர் சாதனை

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முழுநீள பக்தி தொடராக, வாரநாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது அம்மன் தொடர். பவித்ரா, அமல்ஜித் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் சமீபத்தில் புதிய பரிணாமத்துடன் புதிய நடிகர்களுடன் அம்மன் சீசன் 2 வாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நாயகி நிவிஷா இணைந்துள்ளார். தற்போது பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் 1000 எபிசோடுகளை தொட்டு சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சீரியல் குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு அம்மன் தொடர் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !