உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவை வெட்கப்பட்ட வைத்த பாண்டிராஜ்

சூர்யாவை வெட்கப்பட்ட வைத்த பாண்டிராஜ்

பசங்க 2 படத்திற்கு பிறகு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.. பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.. ஏற்கனவே வாடா தம்பி என்கிற பாடல் வெளியான நிலையில் தற்போது உள்ளம் உருகுதய்யா என்கிற இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலில் முருகன் வேடம் அணிந்து நடித்துள்ளார் சூர்யா.

இந்த வேடத்தில் நடிக்கும்போது ரொம்பவே வெட்கப்பட்டபடி நடித்தாராம் சூர்யா. நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்பவே வெட்கப்பட்டபடி நடித்தேன் டைரக்டரே என்று பாண்டிராஜிடம் சொல்வது போல கூறியுள்ளார் சூர்யா. அவரது தந்தை சிவகுமார் சில புராண படங்களில் முருகன் வேடத்தில் நடித்து பெயர் பெற்றவர் என்பதால் அவருடன் சூர்யாவின் முருகன் கெட்டப்பை ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !