விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பில் இணைந்த கத்ரினா கைப்
ADDED : 1378 days ago
ஹிந்தியில் ஜானி கத்தார், பத்ராபூர், அந்தாதூன் என பல படங்களை இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன். இவர் தற்போது விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த மாதம் நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்த கத்ரீனா கைப் திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம் இதுவாகும் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீராமின் மெர்ரி கிறிஸ்துமஸ் மூலம் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி உள்ளேன். அவரால் இயக்கப்படுவதை பெரும் மதிப்பாக கருதுகிறேன். விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த படம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.