மலையாள இசையமைப்பாளர் விஸ்வநாதன் நம்பூதிரி காலமானார்
ADDED : 1378 days ago
மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி இன்று(டிச., 29) காலமானார். 58 வயதான இவர் புற்று நோயால் பாதிக்காப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு கவுரி என்கிற மனைவியும் அதிதி, நர்மதா என்கிற இரு மகள்களும், கேசவன் என்கிற மகனும் உள்ளனர்.
இவர் மலையாள சினிமாவின் பிரபல முன்னணி பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான கைத்தபுரம் தாமோதரன் நம்பூதிரியின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்தில் 1997ல் ஜெயராஜ் இயக்கிய தேசிய விருது படமான களியாட்டம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி, கண்ணகி, திலகம், ஒர்ம மாத்திரம் என கிட்டத்தட்ட 23 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.