உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புனித் ராஜ்குமார் வீட்டுக்கு சென்று கமல் ஆறுதல்

புனித் ராஜ்குமார் வீட்டுக்கு சென்று கமல் ஆறுதல்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று தமிழ் நடிகர்கள் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றுள்ளார். இதை தொடர்ந்து புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று புனித் ராஜ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின்போது நடிகர் ரமேஷ் அரவிந்தும் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !