ரைட்டர் பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது
ADDED : 1488 days ago
சமுத்திரகனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ரைட்டர் படம் கடந்த 24ம் தேதி வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. காவல்துறையில் நடக்கும் அடக்குமுறைகளை விறுவிறுப்பான திரைக்கதையால் அழுத்தமாக அந்த படம் பேசி இருந்ததால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப்.
இந்த நிலையில் தற்போது பிராங்களின் ஜேக்கப் அடுத்தபடியாக விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கும் படத்தை இயக்கப்போவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது விக்ரம் நடிப்பில் மகான், கோப்ரா படங்களை தயாரிக்கும் லலித் குமார் அடுத்தபடியாக பிராங்களின் ஜேக்கப் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக உள்ளது.