உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் - மரியா விவாகரத்து

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் - மரியா விவாகரத்து

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். பிரமாண்ட ஆக்ஷன் படங்கள் மூலம் உலக புகழ்பெற்றவர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடியின் உறவினரும், பிரபல பத்திரிகையாளருமான மரியாவை காதலித்து திருமணம் செய்தார் அர்னால்ட். 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். 4 குழந்தைகளை பெற்றனர். அந்த குழந்தைகளும் பெரியவர்களாகி அவர்களுக்கும் திருமணம் நடந்து செட்டிலாகி விட்டார்கள்.

இந்த நிலையில் அர்னால்ட் தன் வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி அவர் மூலமும் ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் இதனை வெளிப்படையாக அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மரியா கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

25 வருட வாழ்க்கை, 4 குழந்தை இதற்கு பிறகும் விவாகரத்தா என்று நீதிமன்றம் யோசித்தது. முதலில் இருவருக்கும் இடையிலான சொத்து பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்தது. அதன்பிறகு ஜீவனாம்ச பிரச்சினையை தீர்த்து வைத்தது. இதை செய்து முடிக்கவே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது இருவருக்கும் முறைப்படியான விவாகரத்தை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !