ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவர்ச்சி நடிகை
தமிழ் சின்னத்திரையில் நம்பர் 1 தொடராக ரோஜா சீரியல் டிஆர்பியில் நீண்ட நாட்களாக முன்னணியில் இருந்தது. ஆனால், சமீப காலங்களில் சொதப்பலான ஸ்கிரீன் பேளேவால் டிஆர்பியில் சறுக்கி வருகிறது. எனவே, விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க, புதுப்புது முயற்சிகளை சீரியல் குழுவினர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை சோனாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவர் கெஸ்ட் ரோலில் வருகிறாரா அல்லது வில்லியாக நடிக்கிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும்.
ரோஜா சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் கர்நாடகாவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார். ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் ஆந்திராவை சேர்ந்த நடிகை பிரியங்கா நல்கார் நடித்து வருகிறார். இரவு 9 மணி முதல் 9.30 வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மற்ற சீரியல்களை விட அதிக ரசிகர்கள் உள்ளனர்.