சிம்புவுக்கு ஜோடியான சித்தி இத்னானி
ADDED : 1373 days ago
ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இதில் சிம்பு நடித்து வருகிறார். படத்தின் நாயகி பற்றி இதுவரை அறிவிக்காமல் இருந்தார்கள். தற்போது சிம்பு ஜோடியாக சித்தி இத்னானி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்ப லகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறவர் சித்தி இத்னானி. மும்பையை சேர்ந்த இவர் ஐதராபாத்திலேயே தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சிம்பு, சித்தி இத்னானி தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.