ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுக்கும் காஜல் பசுபதி! வைரல் போட்டோஸ்!!
ADDED : 1418 days ago
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் காஜல் பசுபதி. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தார். காஜல் இடையில் சில நாட்கள் உடல் பருமனாக இருந்த காரணத்தால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். தற்போது அவர் உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி வருகிறார்.
இந்நிலையில் அவர், ரம்யா பாண்டியன் ஸ்டைலில் புடவையில் படு கிளாமரான மொட்டை மாடி போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் ரம்யா பாண்டியனுக்கே போட்டியா என கமெண்ட் அடித்து வருகின்றனர். காஜல், தமிழ் சினிமாவில் வசூல்ராஜா எம்பிபிஎஸ், சிங்கம், கோ, மெளனகுரு, கெளரவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.