முதன்முறையாக மொட்டைத்தலை கெட்டப்பில் மோகன்லால்
'பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' என்கிற படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் மாறியுள்ளார் மோகன்லால். இந்தப்படம் 3டியில் உருவாகி வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்த மோகன்லால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மொத்த மலையாள சினிமா உலகத்துக்கும் நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் ஷாக்காகத்தான் இருந்திருக்கும். ஆம்.. இந்தப்படத்தில் முதன்முறையாக மொட்டைத்தலையுடன் நடிக்கிறார் மோகன்லால்.
போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகாவலன் கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடிக்கிறார். அதற்காகத்தான் மொட்டைத்தலையும் நீண்ட தாடியுமாக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார் மோகன்லால். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார்.