மாநாடு 2 போன்ற திரைக்கதை; எஸ்.ஜே.சூர்யா குஷி
ADDED : 1374 days ago
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் விஷாலை வைத்து ‛மார்க் ஆண்டனி' என்னும் படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, ‛கடவுளே, எல்லா நல்ல கதைகளையும் என்னிடமே அனுப்புகிறாயே. ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக இந்தப்படம் வெற்றிப்பெறும். இந்தப் படத்தை ‛மாநாடு 2' என சொல்லாம். அப்படி ஒரு திரைக்கதை. இந்தப் படம் வெற்றிகளை குவிக்கும்,' எனத் தெரிவித்துள்ளார்.