ஜன.,26ல் 'யுத்தசத்தம்' வெளியீடு
ADDED : 1374 days ago
தொடர்ந்து நகைச்சுவை பாணியிலான படங்களை மட்டுமே இயக்கி வந்த எழில், தற்போது த்ரில்லர் கதை ஒன்றை இயக்குகிறார். நடிகர்கள் பார்த்திபன், கவுதம் கார்த்திக் ஆகியோரை வைத்து ‛யுத்த சத்தம்' என்னும் படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய 'யுத்தசத்தம்' க்ரைம் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் சூழலில், வரும் ஜனவரி 26ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.