டப்பிங் படமான 'புஷ்பா' தமிழகத்தில் வசூலித்த கோடிகள்
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' படம் கடந்த மாதம் டிசம்பர் 17ம் தேதி வெளியானது. தெலுங்கில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் 25 கோடியைத் தாண்டிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு டப்பிங் படம் நேரடி தமிழ்ப் படங்களை விட இவ்வளவு வசூலித்தது கடந்த வருடத்தின் ஆச்சரியங்களில் ஒன்று. இந்தப் படம் ஹிந்தியிலும் 60 கோடி வசூலைத் தொட்டுவிட்டது. அங்கும், நேரடி ஹிந்திப் படமான '83' படத்தின் வசூலை விட 'புஷ்பா' வசூல் அதிகம்.
தயாரிப்பு நிறுவனமே படத்தின் வசூல் உலகம் முழுவதும் 300 கோடியைத் தாண்டிவிட்டதாக அறிவித்துள்ளது. இப்படத்தின் மூலம் பிரபாஸுக்குப் பிறகு அல்லு அர்ஜுனும் பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்துவிட்டார். அதனால், 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தை இன்னும் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளார்களாம்.