மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1342 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1342 days ago
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்றன. படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 13ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து வெளியான வேற மாறி பாடலும், அம்மா செண்டிமெண்ட் பாடலும் பெரிய ஹிட் அடித்தது. இந்த இரண்டு பாடல்களையும் எழுதியது பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன். வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய இரண்டு பாடல்களுக்கும் அவர் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று வலிமை படத்தின் இயக்குனர் வினோத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலால் அஜித்தின் ரசிகர்கள் பலர் விக்னேஷ் சிவனை புகழ்ந்து வருகின்றனர்.
1342 days ago
1342 days ago