மேலும் செய்திகள்
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1343 days ago
புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச்
1343 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் மாநாடு. இந்த படம் வெளியாவதற்குள்ளாகவே தனது அடுத்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி முடித்து விட்டார்.
இதில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிதுள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் மற்றும் ரியா சுமன் ஆகியோர் இந்தப் படத்தில் கதாநாயகியகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இளைஞர்களை கவரும் வகையில் படம் உருவாகி உள்ளது.
கயல் பட நடிகர் சந்திரன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. சந்திரன் 2014ம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் சிறப்பாக நடித்து பல விருதுகளை வென்றார். அந்தப் படத்தை அடுத்து ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம், கிரகணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
1343 days ago
1343 days ago