துபாயில் புத்தாண்டு கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா
ADDED : 1477 days ago
இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். இதற்கான நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி வருகின்றனர். அந்த வகையில் இந்த புத்தாண்டை துபாயில் கொண்டாடியுள்ளனர்.
அங்கு பல்வேறு இடங்களுக்கு இருவரும் சேர்ந்து சுற்றுலா சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் புத்தாண்டு இரவில் உலக புகழ்பெற்ற புர்ஜ் கலிபாவின் முன்புறம் புத்தாண்டை வரவேற்ற புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.