2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்…
அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் எல்கே அக்ஷய் குமார், அனிஷ்மா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 25ம் தேதி வெளியான படம் 'சிறை'.
ஒரு இளம் சிறைக் கைதியின் காதலைப் பற்றி உருக்கமான விதத்தில் சொல்லப்பட்ட இந்தப் படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தது. கடந்த ஆண்டில் சில சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சத்துடன் வெளிவந்து வெற்றி பெற்றன. அது போல மாதக் கடைசியில் வந்த 'சிறை' படமும் வெற்றி பெற்றது.
சுமார் 5 கோடி செலவில் தயாரான இந்தப் படம் 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு சில புதிய படங்கள் வந்தாலும் இந்தப் படம் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
2025ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி விக்ரம் பிரபுவின் 25வது படமாக வெளிவந்த இந்தப் படம் இன்றுடன் 25வது நாளைத் தொட்டுள்ளது.