100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி'
எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ம் தேதி வெளியாகவில்லை. தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஜனவரி 21ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இப்படத்திற்கான வெளியீட்டை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே, இப்படத்தின் முதல் சிங்கிளாக வெளிவந்த 'தளபதி கச்சேரி' பாடல் யு டியூப் தளத்தில் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சுமார் 70 நாட்களில் இப்பாடல் இந்த சாதனையைப் புரிந்துள்ளது.
விஜய் - அனிருத் கூட்டணி என்றாலே பாடல்கள் யு டியூப் தளங்களில் சாதனைகள் படைக்கும். அந்த விதத்தில் இந்தப் பாடலும் 100 மில்லியன் சாதனையில் இணைந்துள்ளது.
'கத்தி' படத்தில் முதல் முறை இணைந்த இக்கூட்டணி, தொடர்ந்து “மாஸ்டர், பீஸ்ட், லியோ” ஆகிய படங்களிலும் இணைந்து, சில 100 மில்லியன் பாடல்களைத் தந்துள்ளன.