என் கிரிக்கெட் நண்பருடன் முதன்முதலாக இணைகிறேன்- தமன்
ADDED : 1484 days ago
டான் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக தனது 20ஆவது படமாக உருவாக இருந்த சிங்கம் பாதையில் நடிப்பதாக இருந்தார். ஆனால் திடீரென்று தான் அறிமுகமாகும் முதல் தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு சிங்க பாதை படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். அனுதீப் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். இதையடுத்து தமன் வெளியிட்டுள்ள செய்தியில், சிவகார்த்திகேயன் எனது அன்பான நண்பன். நாங்கள் இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அவர் நடிக்கும் படத்திற்கு முதன் முறையாக இசை அமைப்பது மகிழ்ச்சி உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.